பெர்லின்:
மின்சாரத்தை பயன்படுத்தம் மக்களக்கு கட்டணம் இல்லை என்பதோடு, அதிக மின்சாரத்தைப் பயன்படுத்த ஊக்கப்படுத்தும்படியாக ஊக்கத்தொகையும் அளிக்கிறது ஜெர்மன் அரசு.
அனல் மின்சாரம், புனல் மின்சாரம், அணு மின்சாரம் என்று பல வழிகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதோடு சமீப காலமாக காற்றாலைகள், சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.
ஜெர்மன் நாட்டிலும் காற்றாலைகள் மற்றும் சூரிய சக்தி மூலம் பெரும் அளவில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
காற்று நன்றாக வீசும் காலங்களில் மின் உற்பத்தி மிகவும் அதிகரிக்கிறது. இது போன்ற நேரங்களில் தேவைக்கும் மிக அதிகமாக மின்சாரம் உற்பத்தியாகிறது.
இது போன்ற நேரங்களில் அனல் மின்நிலையங்கள் மற்றும் அணு மின் நிலையங்களால் உடனடியாக மின்னுற்பத்தியை குறைக்க முடியாது. ஆகவே தேவைக்கு அதிகமாக மின்சாரம் உற்பத்தியாகிவிடுகிறது.
இதுபோன்ற தருணங்களில் உபரி மின்சாரத்தை சேமித்து வைக்கும்படியான தொழில் நுட்பங்கள் இன்னும் வரவில்லை. இது குறித்த ஆராய்ச்சகள்தான் நடந்துவருகிறது.
ஆகவே, உபரியாக பயன்படுத்தப்படும் மின்சாரத்தை செலவழிக்க மக்களை ஊக்கப்படுத்த ஜெர்மன் அரசு முடிவு செய்தது.
அதன்படி மின்சாரம் அதிகம் உற்பத்தியாகும் நாட்களில் மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கு ஊக்கத்தொகை அளிக்கிறது ஜெர்மன் அரசு.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தொழிற்சாலைகள் ஒரு மெகாவாட் மின்சாரத்தைப் பயன்படுத்தினால் அறுபது டாலர் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இப்படி இந்த வருடம் மட்டும் நூறு முறைக்கு மேல் நடந்திருக்கிறது.
நம் நாட்டை நினைத்தால்…!