வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133-ஆக உயர்வு – ஜெர்மன் அதிகாரிகள் தகவல்

Must read

பெர்லின்:
ஜெர்மனியில் பெய்து வரும் கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை வெள்ளத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் பெய்து வரும் கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை வெள்ளத்துக்கு இதுவரை 133 பேர் உயிரிழந்துள்ளனர். பலரை காணவில்லை.

மேற்கு மற்றும் மத்திய ஜெர்மனி பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நிலச்சரிவுஇதனால், ‘நார்த் ரெய்ன் வெஸ்ட் பாலியா’ உட்பட பல மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாகாணங்களின் பல நகரங்களில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தில் கார் உட்பட பல வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மழை வெள்ளத்துக்கு இதுவரை 133 பேர் உயிரிழந்துள்ளனர். பலரை காணவில்லை. ஷூல்ட் நகரில் ஆறு வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இன்னும் மூன்று நாட்களுக்கு மழை தொடரும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மீட்பு நடவடிக்கைகள்முடுக்கிவிடப்பட்டுள்ளன.

More articles

Latest article