வாஷிங்கடன்:
மெரிக்க அதிபர் ஜே பைடன், ஜூலை 26ஆம் தேதி ஈரான் பிரதமரைச் சந்தித்துப் பேச உள்ளார் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி வெளியிட்டுள்ள அறிக்கையில், இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜூலை 26 ம் தேதி வாஷிங்டனில் ஈராக் நாட்டுப் பிரதமர் முஸ்தாபா அல்-கதிமியை சந்திப்பார். ஈரான் பிரதமரின் வருகை அமெரிக்காவிற்கும் ஈராக்கிற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் இருதரப்பு ஒத்துழைப்பை முன்னிலைப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகளில் கல்வி, சுகாதாரம், கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு, அத்துடன் அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும், இஸ்லாமிய அரசு பயங்கரவாதக் குழுவின் (ரஷ்யாவில் தடைசெய்யப்பட்ட) நீடித்த தோல்வியை உறுதி செய்வதற்கான கூட்டு முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.