பெர்லின்

ஜெர்மன் அரசு இந்தியப் பயணிகளுக்கு விதித்துள்ள தடையை நீக்கி உள்ளது.

கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனா உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டது.  அத்துடன் நேபாளம், இங்கிலாந்து, போர்ச்சுகல் ரஷ்யா ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.  எனவே ஜெர்மன் அரசு இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து பயணிகள் வரத் தடை விதித்தது.

இதனால் இந்த நாடுகளுக்கு இடையிலான விமானச் சேவை ஆகியவற்றுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.  மேலும் இந்நாடுகளில் இருந்து ஜெர்மனி  வந்தவர்கள் 14 நாட்கள் கட்டாயமாகத் தனியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தற்போது ஜெர்மன் அரசின் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் இந்தியா மற்றும் நேபாளத்தில் இருந்து வரும் பயணிகளுக்கான தடையை நீக்கி உள்ளது.   மேலும் இந்தியா மற்றும் நேபாளத்தைத் தவிர பிரிட்டன், போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளுக்கான தடையையும் நீக்கி உள்ளன.

தற்போது ஜெர்மன் அரசு தடை செய்துள்ள நாடுகள் பட்டியலில் போட்ஸ்வானா, பிரேசில், எஸ்வாடினி, லெசோதோ, மாலாவி, மொஸாம்பிக், நமீபியா, ஜாம்பியா, ஜிம்பாப்வே, தென் ஆப்ரிக்கா, மற்றும் உருகுவே ஆகியவை இன்னும் உள்ளன.