சென்னை: தமிழகத்தில் மட்டி வாழைப்பழம்  உள்பட 3 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ  குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு (Geographical indication) எனப்படும். இந்த குறியீடு, அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையும், நன்மதிப்பையும், பறை சாற்றும்  சான்றாக விளங்கும். இது ஒரு தனிப்பட்ட அடையாளங்காட்டியாகும் , இது ஒரு குறிப்பிட்ட புவியியல் நிறுவனங்களில் உள்ள மற்றவற்றிலிருந்து வேறுபடுத்துகிறது . பொதுவாக புவிசார் குறியீடு மனிதனால் படிக்கக்கூடிய மற்றும் குறுகிய அடையாளங்காட்டியாகும்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே ஏராளமான பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், கடந்த மார்ச் 31ந்தேதி (2023, மார்ச் 31)  மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், மயிலாடுதுறை தைக்கால் பிரம்பு வேலைப்பாடு , ஆத்தூர் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை, சோழவந்தான் வெற்றிலை, நகமம் காட்டன் சேலை, மயிலாடி கல் சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி ஆகிய 11 பொருட்களுக்கு புவிசார் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது மேலும் 3 பொருட்களுக்கு   புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.  அதன்படி, ஜடேரி நாமக்கட்டி, வீரமாங்குடி செடிபுட்டா சேலை, மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.  இந்த தகவலை, வழக்கறிஞர் சஞ்சய் காந்தி   தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பதவி ஏற்றபிறகு, இதுவரை   17 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.