
லண்டன்: பிபிசி டெஸ்ட் வர்ணனையாளர் ஜெஃப்ரி பாய்காட், தனது 14 ஆண்டுகால வர்ணனைப் பணியிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
தான் இந்த முடிவை மேற்கொள்வதற்கு கொரோனா வைரஸ்தான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கிரிக்கெட் வர்ணனையாளர் இயான் சேப்பலைப் போன்று புகழ்பெற்றவர்தான் ஜெஃப்ரி பாய்காட். இவர் தனக்கென்று ஒரு தனி ஸ்டைலை கைக்கொள்பவர். மொத்தம் 14 ஆண்டுகள் பணி அனுபவத்திற்கு பிறகு இவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார். இவருக்கு தற்போது வயது 79.
“14 ஆண்டுகள் நல்ல அனுபவத்தை வழங்கிய பிபிசி -க்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது பணியை மகிழ்ச்சியுடன் செய்து வந்தேன். எனது வர்ணனையைப் பிடித்தவர்கள் மற்றும் பிடிக்காதவர்கள் ஆகிய இருவருக்குமே நன்றிகள்.
கிரிக்கெட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். தற்போதைய நோய் தொற்று சூழலில், எதார்த்த நிலையைப் புரிந்தே முடிவெடுக்க வேண்டியுள்ளது. பைபாஸ் சர்ஜரி செய்துள்ள நான் தற்போது ஓய்வுபெறுவதே சிறந்தது” என்றார்.
[youtube-feed feed=1]