அமெரிக்க காடுகளில் நோய் கொசுக்களை அழிக்கும் வகையிலான புதிய மரபணு மாற்ற கொசுக்கள்

Must read

நியூயார்க்: அமெரிக்காவின் பில்கேட்ஸ் நிறுவனத்தால் நிதியுதவி செய்யப்படும் ஒரு பயோடெக் ஆராய்ச்சி நிறுவனம், ஜெனடிக் மாற்றம் செய்யப்பட்ட 15,0000 கொசுக்களை உற்பத்தி செய்து, காடுகளில் விட்டுள்ளது.

இதன்மூலம், மலேரியா மற்றும் டெங்கு போன்றவற்றை பரப்பும் கொசுக்களை அழித்து, அந்நோய்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்து விரட்ட முடியும் என்று நம்பப்படுகிறது.

பிரிட்டனின் அபிங்டனிலுள்ள ஆக்ஸிடெக் என்ற இந்த நிறுவனம், இந்தவகை கொசுக்களை ஏற்கனவே பிரேசில், மலேசியா, பனாமா மற்றும் கேய்மன் தீவுகளில் பரிசோதித்துள்ளது. ஆனால், அமெரிக்காவில் மட்டும் அந்நிறுவனத்தால் ஒழுங்குமுறை ஆணைய அனுமதியைப் பெறமுடியாமல் இருந்தது. ஆனால், தற்போது அமெரிக்காவில் அந்த அனுமதி கிடைத்துவிட்டது.

தற்போது, மேற்சொன்ன மரபணு மாற்றம் செய்யப்பட்ட 150000 கொசுக்கள், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் காட்டில் விடப்பட்டுள்ளன. அந்தக் காட்டுப்பகுதியில் உற்பத்தியாகும் கொசுக்கள்தான், அப்பிராந்தியத்தில், கொசுவால் உற்பத்தியாகும் நோய்களுக்கு முக்கிய காரணியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

More articles

Latest article