ஜனவரி 2: பொ.செ. ஆகிறார் சசிகலா?

Must read

நியூஸ்பாண்ட்
இன்று சென்னையில் கூடிய அதிமுக பொதுக்குழு, வி.கே. சசிகலா தலைமையில் இயங்கப்போவதாக தீர்மானம் இயற்றியுள்ளது. சசிகலாவை, தலைமையேற்கவும் வற்புறுத்தி உள்ளது. இந்த தீர்மானத்தை எடுத்துக்கொண்டு ஓ.பி. எஸ். தலைமையிலான குழு, சசிகலாவின் போயஸ் இல்லத்துக்குச் சென்று அளித்தது.
 
 

சசிகலா இதற்கு மறுப்பு தெரிவிக்கமாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். இப்பதவிக்கு வருவதற்குத்தானே அவரும், அவரது குடும்பத்தினரும் பகீரத முயற்சி எடுத்து வந்தனர்?
ஆகவே பொ.செ. வாக என்று பதவியேற்பார் என்பதுதான் கேள்வி.
இதற்கு பதிலாக, “வரும் ஜனவரி 2ம் தேதி பொ.செ.வாக பதவியேற்பார்” என்று  தெரிவிக்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
OPS hands over the General council’s decision on unanimous selection of  Sasikala as the party’s General Secretary.
 
Pic courtesy Jaya TV grab

More articles

Latest article