சென்னை: தமிழக ரேசன் கடைகளுக்கு நவம்பர் 6ந்தேதி பொதுவிடுமுறை விடப்படுவதாக தமிழக நுகர்பொருள் வழங்கல் துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தீபாவளியையொட்டி, மாநிலத்தில் உள்ள ரேசன் கடைகள் காலை 8 மணி முதல் இரவு 7மணி வரை செயல்பட உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி நவம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய மூன்று தினங்களில் கூடுதல் பணி நேரம் செயல்படுவதால் நவம்பர் 6-ஆம் தேதி பொது விநியோக திட்ட நியாயவிலை கடைகளுக்கு பொது விடுமுறை அளித்து ஆணையிடப்படுகிறது என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
மேலும், வரும் 7-ஆம் தேதி (மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை) வழக்கம் போல் நியாயவிலை கடைகள் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.