டெல்லி:  85 வயதுக்கு மேற்பட்டோர் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம் இந்திய  தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே தபால் வாக்குமூலம் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 10ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல், புதுச்சேரி (ஜூன் 15), மேற்கு வங்காளம் (மே 7), அசாம் (மே 20), கேரளா (மே 23) ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடைகிறது. எனவே, இந்த 5 மாநிலங்களில் உள்ள 824 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்து தேர்தல்  தேதிகளை  ஏப்ரல் 15ந்தேதி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் வன்முறை குறைவு என்பதால், எப்போதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. வடமாநிலங்களில்தான் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் தற்போது நடைபெற உள்ள 5 மாநில தேர்தலை கண்காணிக்க 714 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், 233 ஐ.பி.எஸ் அதிகாரிகளும் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 497 செலவின பார்வையாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,  85 வயதுக்கு மேற்பட்டோர்  மாற்றுத்திறநாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வதியை  தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பான   அறிவிப்பை `இந்தியத் தேர்தல் ஆணையம்(ECI)’ வெளியிட்டுள்ளது.

அதன்படி, 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் `மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951′ பிரிவு 60(c) படி தபால் வாக்கு மூலம் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியை பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தகைய வாக்காளர்கள், தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 5 நாட்களுக்குள், தத்தம் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் (Returning Officer) இதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்*.

அதன்படி, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில், வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியைப் பெறுவதற்காக இதுவரை 2.37 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்குத் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் (ROs) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் அசாம், கேரளா, புதுச்சேரியில் ஏப்ரல் 9, 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]