டெல்லி

ந்தியாவில் ஜி எஸ் டி வசூல் கடந்த5 ஆண்டுகளில் இரட்டிப்பாகி உள்ளது/

கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்தன  ஜி.எஸ்.டி. வசூல், கடந்த ஏப்ரல் மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் கோடி கிடைத்தது.  மே மாதம் ரூ.2 லட்சத்து 1 ஆயிரம் கோடி கிடைத்தது. இன்று ஜூன் மாத ஜி.எஸ்.டி. வசூல் விவரங்கள்  வெளியிடப்பட உள்ளது.

கடந்த 2024-2025 நிதியாண்டில், மொத்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.22 லட்சத்து 8 ஆயிரம் கோடியாக உச்சம் தொட்டுள்ளது. கடந்த 2020-ஆம் நிதியாண்டில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.11 லட்சத்து 37 ஆயிரம் கோடியாக இருந்தது. அதாவது 5 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி. வசூல் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது., முந்தைய 2023-2024 நிதியாண்டின் வசூல் ரூ.20 லட்சத்து 18 ஆயிரம் கோடியாக இருந்ததை ஒப்பிடுகையில் 2024-2025 நிதியாண்டின் வசூல் 9.40 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

கடந்த 2024-2025 நிதியாண்டின் சராசரி மாதாந்திர வசூல் ரூ.1 லட்சத்து 84 ஆயிரம் கோடியாகவும், 2023-2024 நிதியாண்டின் சராசரி மாதாந்திர வசூல் ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் கோடியாகவும், 2021-2022 நிதியாண்டின் சராசரி மாதாந்திர வசூல் ரூ.1 லட்சத்து 51 ஆயிரம் கோடியாகவும் இருந்தது.