கிங்ஸ்டன்

ந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சு குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு முன்னாள் வீரர் கவாஸ்கர் பதில் அளித்துள்ளார்.

நடந்து முடிந்த இந்தியா மேற்கிந்தியத் தீவுகள்  இடையிலான டெஸ்ட் பந்தயத்தில் இந்தியா வென்று தொடரைக் கைப்பற்றியது. இந்த போட்டியில் தொடர்ந்து மூன்று விக்கட்டுகளை எடுத்து இந்தியப் பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சாதனை புரிந்தார். இவர் தொடர்ந்து மூன்று விக்கட்டுகள் எடுத்து ஹாட்ரிக் சாதனை செய்ததற்குப் பாராட்டுக்களுடன் சர்ச்சையும் எழுந்துள்ளது.

 

ஜஸ்பிரித் பும்ரா பந்து வீசுவதில்லை எனவும் அவர் பந்தைத் தூக்கி எறிகிறார் எனவும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த சர்ச்சை  குறித்து இயன் பிஷப் தனது வர்ணனையில், “ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சு தனித்துவமானது எனினும் விதிமுறைகளுக்கு உட்பட்டு நன்கு உள்ளது. மேலும் கூறவேண்டுமெனில் அவரது பந்து வீச்சு மிகத் துல்லியமாக உள்ளது. அவரை பந்து எரிகிறார் எனச் சந்தேகிப்பவர்கள் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளட்டும்” எனத் தெரிவித்தார்.

 

 

பும்ரா மீதான விமர்சனம் குறித்து  முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், “ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சை சந்தேகிப்பவர்கள் யார் எனப் பெயர் சொல்ல முடியுமா? அவரது பந்து வீச்சில் குறை சொல்பவர்கள் யார்? பும்ராவின் பந்து வீச்சை நேரில் கூர்ந்து கவனித்தால் அவர் ஒரு சில அடிகள் வந்து பிறகு வேகம் அடைந்து கையை மேலே உயர்த்தி நேரே பந்து வீசுகிறார். அவர் முழங்கையை மடக்குவது இல்லை.” எனப் பதில் அளித்துள்ளார்.