சிம்புவை வைத்து நதிகளில் நீராடும் சூரியன் என்ற புதிய படத்தை இயக்கவுள்ளார் கெளதம் மேனன்.
இந்நிலையில் கெளதம் மேனன் புதிய படம் ஒன்றில் இணைந்திருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
டான்ஸ் மாஸ்டரும் பிக்பாஸ் பிரபலமுமான சாண்டி 3.33 என்ற படத்தில் லீடிங் ரோலில் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற சரவணன் மற்றும் ரேஷ்மா ஆகியோரும் நடிக்கின்றனர். திகில் படமாக இப்படம் உருவாகிறது. இதில் அமானுஷ்யங்களை ஆய்வு செய்பவராக கெளதம் மேனன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாம்பூ ட்ரீஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக ஜீவிதா கிஷோர் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் நம்பிக்கை சந்துரு இயக்கி வருகிறார். அண்மையில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.