டெல்லி :

 

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கோவிட்19 எனும் கொரோனா வைரசால் இதுவரை 1,48,306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் 5,539 உயிர்களை பலிவாங்கி இருக்கிறது இந்த கோவிட்19.

தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை இரண்டு பேரை பலி வாங்கியதோடு அல்லாமல் 87 பேரைப் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பரவலைப் பேரிடராக அறிவித்துள்ளது மத்திய அரசு.

இந்நிலையில், மாட்டுச் சிறுநீர் குடிக்கும் விருந்தை நடத்தியுள்ளது, அகில இந்திய இந்து மகாசபா அமைப்பு.

டெல்லி மந்திர் மார்க் பகுதியில் அமைந்துள்ள அதன் தலைமையகத்தில் இன்று மதியம் 12 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்கியது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மாட்டுச் சிறுநீர் குடித்தனர்.

இதில் கலந்து கொண்ட இந்து மகாசபா அமைப்பை சேர்ந்த ஒருவர், நாங்கள் 21 ஆண்டுகளாக மாட்டுச் சிறுநீர் குடித்து வருவதோடு அதன் சாணத்திலும் குளிக்கிறோம், எங்களுக்கு ஆங்கில மருந்தை உட்கொள்ள வேண்டிய அவசியம் இதுவரை வந்ததில்லை எனத் தெரிவித்தார்.

மனித உடலின் சாதாரண உஷ்ணமே 37 டிகிரி எனும் போது 27 டிகிரி வந்தா வைரஸ் உயிர்வாழாதுனு சொல்றதையும் நம்பும் வெள்ளந்தி மக்கள் வாழும் ஊரில், கோமியத்தை குடித்தா குணமாகுங்கறாங்க, குணமாகுதோ இல்லையோ  இவர்களின் வைத்தியத்தை நம்பி குணா ஆகாமல் இருந்தால் சரி.