போபால்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேரும், சட்ட சபையில் பாதுகாப்பாக கலந்து கொள்வதை உறுதிப்படுத்துமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ம.பி. முதலமைச்சர் கமல்நாத் கடிதம் எழுதி உள்ளார்.

மத்தியபிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் 22 எம்எல்ஏக்கள்  போர்க்கொடி தூக்கி உள்ளனர். அவர்கள் தங்களது எம்எல்ஏக்கள் பதவிகளிலிருந்து விலகி உள்ளனர்.

அவர்களை இன்று மாலைக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மாநில சட்டமன்ற தலைவர் நர்மதா பிரஜாபதி கூறியிருந்தார். இதற்கிடையில் மாநில ஆளுநரை சந்தித்த முதலமைச்சர் கமல்நாத் அடுத்த வாரம் பெரும் பான்மையை நிரூபிக்க தயாராக இருப்பதாக கூறி இருக்கிறார்.

இந் நிலையில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் கமல்நாத், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், பெங்களூருவில் தங்க வைக்கப்பட்டுள்ள 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், மார்ச் 16ம் தேதி தொடங்கும் சட்டசபை அமர்வில் எந்தவித அச்சமும் இல்லாமல் பாதுகாப்பாக மத்தியப்பிரதேசம் என்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.