டில்லி:
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம்ஆகிய நிறுவனங்கள் சமையல் காஸ் சிலிண்டர்களை தொலைப்பேசி மற்றும் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யும் முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், தற்போது சமூக வலை தளங்களான பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் போன்றவை மூலமாக சமையல் காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு வரவேற்பு பலமாக உள்ளது.
Patrikai.com official YouTube Channel