
சென்னை:
கேஸ் ஏஜன்சி கொடுக்க லஞ்சம் பெற்றதாக பெட்ரோலிய துறை முதன்மை இயக்குனர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள பெட்டோலிய துறையின் இயக்குனராக அசோக் குமார் யாதவ் உள்ளார். இவர், கேஸ் ஏஜன்சி எடுக்க விண்ணப்பித்துள்ளவர்களிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் பெறுவதாக புகார் கூறப்பட்டு வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், கேஸ் ஏஜன்சி கொடுக்க லஞ்சம் வாங்கியது உறுதியானது. அதைத்தொடர்ந்து, பெட்ரோலிய துறை முதன்மை இயக்குநர் அசோக் குமார் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Patrikai.com official YouTube Channel