டில்லி

ற்கனவே 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தி கொண்டோர் 9 மாதங்களுக்கு பிறகே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என விரைவில் அரசு அறிவிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாகப் பரவக்கூடியது எனக் கூறப்படுகிறது.  இதையொட்டி மத்திய அரசு நாடெங்கும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரமாக நடத்தி வருகிறது.  உலகெங்கும் ஒமிக்ரான் வைரசைத் தடுக்க கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் போடும் பணி நடந்து வருகிறது.

இந்தியாவில் வரும் 10 ஆம் தேதி முதல் முன்களப் பணியாளர்கள், 60 வயதைத் தாண்டிய முதியோர், இணை நோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.   கொரோனா தடுப்பூசிகள் அதிகபட்சம் ஓராண்டு வரை எதிர்ப்புச் சக்தியைத் தரக்கூடியவை என்பதால் ஓராண்டுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ் போடலாம் என்னும் கருத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது குறித்து மத்திய அரசு அதிகாரிகள், “நோய் எதிர்ப்புச் சக்திக்கான தேசிய தொழில் நுட்ப ஆய்வுக் குழு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இடைவெளி தொடர்பாக ஆலோசித்து வருகிறது.  இது 9-12 மாதங்களாக இருக்கலாம். எனவே 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 9 மாதத்திற்குப் பிறகு பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். விரைவில் இறுதி முடிவு செய்து அறிவிப்பு வெளியாகும்,” என அறிவித்துள்ளனர்.