சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் பள்ளி புத்தகத்தினூடே கஞ்சா பொட்டலம் வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பழவந்தாங்கல் பகுதியில் செயல்பட்டு வரும்  அரசு மேல்நிலைப்   பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர், சந்தேகத்துக்குரிய வகையில்  வகுப்பில் இருந்துள்ளார். இதுகுறித்து சந்தேகம் அடைந்த பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் இவரும் சேர்ந்து, பள்ளி மாணவனையும், அவனது பாடப்புத்தகம் வைத்திருந்த பையையும் சோதனை செய்தனர். அப்போது அவனது பையினுள்  , 50 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்துள்ளது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர் இது குறித்து பழவந்தாங்கல் காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அடிப்படையில் போலீசார் பள்ளிக்குச் சென்று மாணவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகே ஒரு நபர் கஞ்சா விற்பனை செய்வதும் அவரிடம் இருந்து வாங்கி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.  இதனைத்தொடர்ந்து மாணவனின் பெற்றோரை வரவழைத்த போலீசார், மாணவனுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் மாணவருக்கு கஞ்சா விற்பனை செய்த நபரை தேடி வருகின்றனர்.

சென்னை நகர்ப் பகுதியில் பள்ளி, கல்லூரி அருகே போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக ஊடகங்கள் பலமுறை கூறி வரும் நிலையில், அதை காவல்துறை கண்டுகொள்ளாத நிலையில், இன்று பள்ளி மாணவன் தனது பையிலேயே கஞ்சா எடுத்து வரும் நிலை உருவாக்கி உள்ளது. சென்னையில்,  நாளுக்கு நாள் கஞ்சா பழக்கம் அதிகரித்து வருகிறது என பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருவது இன்று ஊர்ஜிதமாகி உள்ளது.

சென்னையில் போதைப்பொருள் விற்பனை அதிகரிப்பு! தாம்பரம் காவல்துறை அதிகாரி அதிர்ச்சி தகவல்…

குற்றச்செயல்கள் அதிகரிப்பா? சென்னையில் ஒரே வாரத்தில் 27 பேர் குண்டர் சட்டத்தில் கைது

போதைப்பொருளை கட்டுப்படுத்துவதில் திமுக அரசு செயலற்றதாக உள்ளது! எடப்பாடி பழனிச்சாமி