காஞ்சிபுரம்: புகழ்பெற்ற காஞ்சி சங்கர மடத்தின் 71ஆவது பீடாதிபதியாக  வலங்கைமான் பகுதியை பூர்விகமாக கொண்டவரும், தற்போது ஆந்திர மாநிலத்தில் வசித்து வருபவருமான கணேச சர்மா டிராவிட் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காஞ்சி சங்கரமடம் வெளியிட்டு உள்ளது.

காஞ்சி சங்கர மடத்தின் 71-வது பீடாதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீ கணேச சர்மா டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ கணேச சர்மா டிராவிட் குடும்பம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள வலங்கைமானை பூர்வீகமாகக் கொண்டது.

இவரை காஞ்சிமடம் புதிய பீடாதிபதியாக நியமித்து அறிவித்து உள்ளது. இதையடத்து அவர்,  ஏப்ரல் 30-ஆம் தேதி அட்சய திருதியை அன்று புதிய பீடாதிபதியாக பதவி ஏற்க உள்ளார். அவருக்கு  காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவருக்கு சன்யாச தீட்சை வழங்குகிறார்.

இளைய பீடாதிபதியாக தேர்வாகியுள்ள ஸ்ரீ கணேச சர்மா டிராவிட் குடும்பம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள வலங்கைமானை பூர்வீகமாகக் கொண்டது என கூறப்படுகிறது. தற்போது அவரது குடும்பம்  ஆந்திராவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.  ஸ்ரீ கணேச சர்மா டிராவிட் பக்தர்களின் விருப்பத்திற்கு இணங்க இந்த தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக சங்கரம் அறிவித்துள்ளது

காஞ்சி காமகோடி பீடம் மிகவும் பழமையானது. ஆதிசங்கரர் இந்த மடத்தை நிறுவினார். தற்போது, 70-வது பீடாதிபதியாக ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருக்கிறார். இந்நிலையில், அடுத்த பீடாதிபதி யார் என்ற கேள்வி எழுந்தது.ஸ்ரீ கணேச சர்மா டிராவிட் ஆந்திர மாநிலம் அண்ணாவரம் ஷேத்திரத்தைச் சேர்ந்தவர். அவரது இயற்பெயர் துத்து சத்திய வேங்கட சூரிய சுப்ரமணிய கணேச ஷர்மா டிராவிட் ஆகும். இப்போது அவர் காஞ்சி சங்கர மடத்தின் 71-வது பீடாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ கணேச சர்மா டிராவிட் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் நிர்மல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ஞான சரஸ்வதி தேவஸ்தானத்தில் வேலை செய்து வந்தார். 2006-ம் ஆண்டு முதல் அவர் வேதம் கற்று வருகிறார். காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளின் ஆசியுடன் ரிக், யஜுர், சாம வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றுள்ளார்.

ஏப்ரல் 30-ம் தேதி அக்ஷய திருதியை அன்று காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது சங்கராச்சாரியாரான ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ கணேச சர்மா டிராவிட்டுக்கு சன்யாச தீட்சை அளிக்கிறார்.