சென்னை: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு, விநாயகர் சிலைகள் வைக்கவோ, ஊர்வலம் நடத்தவோ அனுமதி இல்லை என்று தமிழகஅரசு அறிவித்த நிலையில், திருவல்லிக்கேணி புதுப்பேட்டையில் இந்துமுன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையார் சிலை வைக்க பந்தக்கால் நட்டப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியின்போது, விதிகள் தோறும் பிரமாண்ட விநாயகர் சிலை கள் வைக்கப்படுவது வழக்கம். நடப்பாண்டில் வரும் 22ந்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டா டப்பட உள்ளது. ஆனால், தற்போது கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, வீதிகளில் சிலை வைத்து வழிபடவோ, ஊர்வலம் நடத்தவோ தமிழகஅரசு தடை விதித்துள்ளது.

ஆனால், அரசின் தடையை மீறி  தமிழகத்தில் ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகள் அமைக்கப் படும் என இந்து முன்னணி அறிவித்து உள்ளது.

இந்த நிலையில்,  தமிழகஅரசு அறிவிப்பை மீறி, புதுப்பேட்டை கோமலீஈஸ்வரன் கோவில் எதிரில் இந்து முன்னணி சேப்பாக்கம் செயலாளர் மேகநாதன் தலைமையில் சுமார் 15 நபர்கள் விநாயகர் சதுர்த்திக்காக பந்தக்கால் இன்று  நட்டுள்ளனர். இது பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.