மும்பை: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்காக ₹316 கோடி காப்பீடு செய்யப்பட்டுள்ளது . விநாயக சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடும் விநாயகர் மண்டல் குழுக்களில் ஒன்றான ஜிஎஸ்பி சேவா மண்டல் இந்த இன்சூரன்ஸ் எடுத்துள்ளது.
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி கொண்டாடங்களுக்கு பெயர் போனது மராட்டிய மாநிலம். அங்கு விநாயகர் சதுர்த்தியை 10 நாட்கள் வரை பிரமாண்டமாக கொண்டாடி மகிழ்வர். இந்த நிலையில், நடப்பாண்டு, மும்பையில் உள்ள விநாயகர் சதுர்த்தி திருவிழாக் க்குழுவான கணபதி மண்டல் 316 கோடி ரூபாய்க்கு காப்பீட்டு பாலிசி எடுத்துள்ளது.
மும்பையின் மாதுங்காவில் உள்ள விநாயகர் மண்டல் குழுக்களில் ஒன்றான ஜிஎஸ்பி சேவா மண்டல், இந்த காப்பீடு எடுத்தள்ளது. இந்த காப்பீட்டில் தங்கம், வெள்ளி மற்றும் இதர மதிப்புமிக்க பொருட்களுக்கான ₹31.97 கோடி அடங்கும். இதைத் தவிர, பந்தல், தன்னார்வலர்கள், பூசாரிகள், சமையல்காரர்கள், காலணி கடை ஊழியர்கள், பார்க்கிங் இடத்தில் பணிபுரியும் நபர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு என ₹263 கோடி தனிநபர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த காப்பீடு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜிஎஸ்பி சேவா மண்டல் தலைவர் விஜய் காமத், இன்று (புதன்கிழமை) தொடங்ககி, 10 நாட்கள் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு காப்பீடு செய்துள்ளோம். கடவுளின் நகைகள், விலையுயர்ந்த பொருட்கள், மண்டலை சேர்ந்தவர்கள், பணியாளர்கள், விநாயகர் பூஜைக்கு வருகை தரும் பக்தர்களுக்கும் காப்பீட்டு பாதுகாப்பு உண்டு என்றவர். பர்னிச்சர்கள், சாதனங்கள், கம்ப்யூட்டர்கள், சிசிடிவிகள் மற்றும் ஸ்கேனர்கள் போன்ற கருவிகளுக்கு பூகம்ப அபாயத்துடன் கூடிய ₹ஒரு கோடி காப்ப்பீடு மற்றும் தீ மற்றும் சிறப்பு ஆபத்துக் பாலிசியும் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.