லக்னோ: நாட்டில் அதிகரித்துவரும் பணவீக்கம் மற்றும்  விலைவாசி உயர்வுக்கு எதிராக டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் வருகிற 4ம் தேதி காங்கிரஸ் கட்சி “ஹல்லா போல்”  பேரணியை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து லக்னோவில்  உள்ள UPCC தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் இந்தத் தகவலை தெரிவித்தார்.

செப்டம்பர் 4 ஆம் தேதி டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை எதிர்த்து “ஹல்லா போல்” பேரணியை நடத்த காங்கிரஸ் ஏற்பாடு சய்துள்ளது. நாட்டில்  அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், இளைஞர்களுக்கு வேலை வழங்குவதற்கான உறுதிப்பாட்டை நிறைவேற்றவும் பாஜக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மக்கள் அதிக பணவீக்கத்தை எதிர்கொள்வதாகவும், நாட்டில் 83 சதவீத மக்களின் வருமானம் குறைந்துள்ளதாக தெரிவித்தவர்,  பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சியாக இருந்தபோது பல்வேறு முனைகளில் உயர்ந்த உரிமைகோரல்களை முன்வைத்தார். ஆனால், தற்போது அதிகரித்து வரும் பணவீக்கம் பெட்ரோல், டீசல் விலை மட்டும் அல்ல என்றும், மாவு, பருப்பு, அரிசி, பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்து வருவது குறித்து வாய்திறக்க மறுத்து வருகிறார்.

பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி திணிப்பு மற்றும் வளர்ச்சி விகிதம் குறைந்ததைக் கருத்தில் கொண்டு நிதி நிலைமையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ஸ்ரீனேட்,  மன்மோகன் சிங் அரசாங்கம் 27 கோடி மக்களை வறுமைக் கோட்டிற்கு மேலே கொண்டு வந்துள்ளது. ஆனால், மோடி அரசு  23 கோடி மக்கள் இப்போது வறுமைக் கோட்டுக்குக் கீழே சென்றுவிட்டனர் என்றும் சாடினார்.