டில்லி

துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் கோபாலகிருஷ்ண காந்தி நிறுத்தப்படுவார்.  இவர் காந்தி – ராஜாஜி ஆகியோரின் பேரன் ஆவார்.

இன்று எதிர்கட்சிகள், துணை ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளரை தேர்ந்தெடுக்க  கூட்டம் கூட்டியது.  அதில் 18 எதிர்கட்சியினர் கலந்துக் கொண்டனர். அந்தக் கூட்டத்தில் அனைவரும் கோபாலகிருஷ்ண காந்தி ஒருவரை மட்டுமே முன் மொழிந்ததால் அவரே வேட்பாளராக்கப் பட்டுள்ளார்.

கோபாலகிருஷ்ண காந்தி முன்னாள் மேற்கு வங்க கவர்னர் ஆவார்.  இவருடைய தந்தை, மகாத்மா காந்தியின் மகன் தேவதாஸ் காந்தி, தாயார் ராஜாஜியின் மகள் லட்சுமி.  இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.

போட்டி இருந்தால் துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற்று, அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடைபெறும்