டில்லி:

காந்தியடிகளின் 150வவது பிறந்தநாளை  முன்னிட்டு, நாடு முழுவதும் இருந்து சுமார் 600 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 150 சிறைகளில் இருந்து 600 கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த தினவிழா இன்று நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு சார்பிலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்,  நாடு முழுவதும் உள்ள 150 சிறைகளில் இருந்து 600 கைதிகள் இன்று நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.

கொலை, பாலியல் வன்கொடுமை, ஊழல் போன்ற குற்றச்சாட்டுக்களில் சிறைத் தண்டனை பெற்றவர்களை தவிர மற்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் நல்லெண்ண அடிப்படையில், சிறப்பு நிவாரணத் திட்டத்தின் கீழ் விடுவிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.