திண்டுக்கல்:
திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு CUET  தேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 2022 -23ம் கல்வி ஆண்டுக்கு இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான காந்திகிராமம் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

CUET பொதுத்தேர்வு தமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளில் கணினி அடிப்படையில் நடைபெறும். இந்த தேர்வுக்கான வினாக்கள் கொள்குறி வகையில் இடம்பெறும். தேர்வு மூன்று பிரிவாக நடத்தப்பட உள்ளன . முதல் பிரிவில் ஒரு மாணவர் மூன்று முறைகளில் தேர்வு எழுதலாம். அதில் ஒரு மொழியில் முதன்மை படத்திற்கான தேர்வினை எழுதலாம் . இரண்டாவது பிரிவில் ஒரு மாணவர் அதிகபட்சம் ஆறு பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம் . தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குடும்பத்தின் பன்னிரண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் அமையும் . ஒவ்வொரு குறிப்பிட்ட முதன்மை பாடத்திற்கும் 45 நிமிடங்கள்.  பிரிவு மூன்றில் தொழிற்கல்வி அல்லது திறந்தநிலை தகுதி அல்லது கிராஸ் ஸ்ட்ரீம் படிப்புகளை தேர்வு செய்ய விரும்பும் மாணவர்கள் பங்கேற்கலாம். கேள்விகள் பொது அறிவு ,நடப்பு நிகழ்வுகள் ,பொது மனத்திறன் ,எண்ணியல் திறன் அளவு ,பகுத்தறிவு அடிப்படை ,கணித கல்வியின் எளிய பயன்பாடு, எண் கணிதம் அல்லது இயற்கணிதம் வடிவில் அல்லது அல்லது அடிப்படைகள் மற்றும் பகுப்பாய்வு , பகுத்தறிதல் ஆகியவற்றிலிருந்து இருக்கும் 60 நிமிடங்களில் 75 கேள்விகளில் 60 வினாக்களுக்கு தேர்வு எழுத வேண்டும். விண்ணப்பிப்பதற்கான இணையத்தளம் மே 6ஆம் தேதி வரை திறந்திருக்கும். இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு 944 2534 542 என்ற எண்ணில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.