காந்தி சிலை மெரினாவில் இருந்து மாற்றம் 

Must read

சென்னை

மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை மெட்ரோ ரயில் பணிகளுக்காக இடமாற்றம் செய்யப்பட உள்ளது

தற்போது சென்னை நகரில் மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.   இதில் ஒரு பகுதியாக சென்னை பூந்தமல்லி பைபாஸ் – கலங்கரை விளக்கம் இடையே புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.   இந்த கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் நிலையம் காந்தி சிலை பின்புறம் சுரங்கத்தில் அமைய உள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள், “தற்போது மெரினா கடற்கரையில் உள்ள கந்தி சிலை அருகே மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.   இந்த பணிகளின் போது காந்தி சிலை சேதமடையலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.  இதையொட்டி பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அவற்றில் ஒன்றாகக் காந்தி சிலையை சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை வளாகத்தின் நுழைவுப்பகுதியில் மாற்றி வைக்கப்பட உள்ளது.  இந்த மெட்ரோ ரயில்  பணிகள் முடிவடைந்த பிறகு மீண்டும் காந்தி சிலை மெரினா கடற்கரைக்கு மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.  விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” எனத் தெரிவித்துள்ளனர்.

 

More articles

Latest article