காந்தி நினைவிடம் : பதஞ்சலி குடோன் ஆன அவலம்

Must read

கமதாபாத்.

சுமிருதி காந்த் எனப்படும் சர்க்யூட் அவுஸ் மகாத்மா காந்தியின் நினைவிடமாக போற்றப்பட்டு வந்தது.  தற்போது அது பதஞ்சலி நிறுவனத்தினரால் தங்களின் விற்பனை பொருட்களை குவித்து வைக்கும் குடோன் ஆக உபயோகப்படுத்தப் படுகிறது/

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சுமிருதி காந்த் எனப்படும் சர்க்யூட் அவுஸ் நீதிமன்ற அறையாக உபயோகப் படுத்தப்பட்டது.   1922 ஆம் வருடம் மார்ச் 18ஆம் தேதி நடந்த வழக்கில் காந்திக்கு அதே அறையில் 6 வருட சிறைத்தண்டனை வழங்ககப்பட்டது.   இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் அந்த சர்க்யூட் அவுசின் அறை காந்தி நினைவிடமாக்கப்பட்டது.   அதில் காந்தியின் படங்கள், மற்றும் அவரைப் பற்றிய கோப்புக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

போன மாதம் 25ஆம் தேதி முதல் சர்க்யூட் அவுசில் இருந்த 28 அறைகளில் 12 அறைகள் பதஞ்சலி நிறுவனத்தின் உபயோகத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.  அதில் மேலே குறிப்பிட்ட அறையும் ஒன்று.   தற்போது அந்த அறையில் பதஞ்சலி பொருட்களான நெய், உணவுப் பொருட்கள், பதஞ்சலி ஊழியர்களின் சீருடைகள் போன்றவை குவிக்கப்பட்டுள்ளன.  அதே அறையில் இருந்த காந்தியின் பொருட்கள் ஒரு மூலையில் ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந்த அறைகள் யாருடைய உத்தரவின் பேரில் பதஞ்சலி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது எனும் விவரம் தெரியவில்லை.  இது குறித்து அகமதாபாத் சர்க்யூட் அவுசின் பொறுப்பாளரான சிராக் பட்டேலிடம் கேட்டபோது அவர் தனக்கு தெரியாது எனக் கூறி உள்ளார்.    குஜராத் மாநில துணை அமைச்சர் நிதின் பட்டேல் தமக்கு அதை பற்றி எதுவும் சொல்லப்படவில்லை என தெரிவுத்துள்ளார்.

மொத்தமுள்ள 28 அறைகளில் 12 அறைகள் பதஞ்சலி நிறுவனத்துக்கு எந்த ஒரு வைப்புத் தொகையும் வாங்காமல் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.   இதுவரை வாடகை, மற்றும் வைப்புத் தொகை பற்றி அரசு ஏதும் முடிவு எடுக்காததால் வாடகை ஏதும் பதஞ்சலி நிர்வாகம் இதுவரையில் தரவில்லையாம்.

சர்க்யூட் அவுஸ் அறைகள் பொதுவாக மாநில அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு அரசு செலவிலும், அவர்களின் உறவினர்களுக்கு தினசரி வாடகையாக ரூ. 1300 முன்கூட்டியே வசூலிப்பதும் வழக்கம் என்பது கூடுதல் தகவல்

 

 

More articles

Latest article