டில்லி:

காத்மா காந்தியின்  150- பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், டில்லியில் ராகுல்காந்தி தலைமையில் பிரமாண்ட பாதயாத்திரை நடைபெற்றது.

‘காந்தி சந்தேஷ் யாத்ரா’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த பாதயாத்திரை காங்கிரஸ் தலைமை யகம் அமைந்துள்ள ராஜீவ்பவன் அமைந்துள்ள திண்டயால் உபாத்யாய் மார்க்கில்   (Thindayal Upadhyay Marg) இருந்து தொடங்கி சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காந்தி நினைவிடம் அமைந்துள்ள ராஜ்கோட்டில் நிறைவடைந்தது.

ராகுல்காந்தி தலைமையில் ஆயிரக்கணக்கானோர்  இந்த பாதயாத்திரையில் பங்கேற்றனர். ஒரு குழுவினர் காந்தியின் வேடம் அணிந்தும் பங்கேற்றனர்.

காந்தியின் சபர்மதி ஆசிரமத்தின்  சின்னமான மர சுழல் சக்கரம் ஆகியவை அணிவகுப்பின் ஒரு பகுதியாக இருந்தன. பாதயாத்திரையில் பேசிய ராகுல்காந்தி, அனைத்து உயிரினங்களிடமும், அகிம்சையுடனும் அன்பு செலுத்துவதே காந்தியின் கொள்கை என்றும்,  மதவெறியையும் வெறுப்பையும் தோற்கடிப்பதற்கான ஒரே வழி என்பதை தேசத்தின் தந்தை காட்டியதாகவும்  ராகுல் காந்தி கூறினார்.

காந்தி  தனது வார்த்தைகள் மற்றும் செயல்களின் மூலம், அனைத்து உயிரினங்களுக்கும் அன்பு மற்றும் அகிம்சை ஒடுக்குமுறை, மதவெறி மற்றும் வெறுப்பைத் தோற்கடிப்பதற்கான ஒரே வழி.  என்ற ராகுல், தேசத்தின் தந்தை ’அனைத்து உயிர்களிடமும் அன்பைக் காட்டினார் என்று கூறினார்.

ராஜ்கோட்டில்  பாதயாத்திரை நிறைவடைந்ததும் ராகுல்காந்தி, சோனியா காந்தி காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பாதயாத்திரையில் நிறைவில்  காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் தொண்டர்களுடன் உறுதிமொழி படித்தார்.

காந்தியின் நினைவுகளை போற்றவும், அவருடைய கொள்கைகளை மீண்டும் நிலைநாட்டவும் இந்த பேரணிகள் நடத்தப்படுவதாகவும், மாவட்ட தலைநகரங்களிலும் இந்த பேரணிகளுக்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.