சென்னை
சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட பிரபல கானா பாடகர் பாலா வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

கானா பாலா என அழைக்கப்படும் பாலமுருகன் பிரபல கானா பாடகர் ஆவார். இவர் கானா பாடல்கள் மூலம் பிரபலம் ஆகி தற்போது தமிழ் திரையுலகின் பெரிய பின்னணி பாடகர்களில் ஒருவராக உள்ளார்/ இவர் தமிழ்த் திரைப்படங்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி உள்ளார்.
கானா பாலா சென்னையில் புளியந்தோப்பு பகுதியில் உள்ள கன்னிகாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் நேற்று திரு வி க நகர் 6 ஆம் மண்டலம் 72 ஆம் வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். கடந்த 2006 ஆண்டு மற்றும் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் இதே வார்டில் போட்டியிட்ட கானா பாலா இரண்டாவதாகவந்துள்ளார்.
கானா பாலா இது குறித்து,
‘‘நான் கடந்த 19 வருடங்களாக இந்த பகுதியில் உறுப்பினராக வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன். நான் பிறந்து வளர்ந்த என்பதால் நான் இந்த பகுதி மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்யவே தேர்தலில் போட்டியிடுகிறேன். இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு நான் நன்கு அறிமுகமானவன் என்பதால் இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெறுவேன்.”
எனத் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]