லண்டன்:

வெஸ்ட்இன்டிஸ் அணியிடம் படுதோல்வி அடைந்ததாலேயே உலக கோப்பை கிரிக்கெட் போட்டி யின்  அரைஇறுதி வாய்ப்பை இழந்தோம் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது கூறி உள்ளார்.

12-வது ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மண்ணில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ரவுண்ட் ராபின் முறையிலான லீக் போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும்.

நேற்று 43வது லீக் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதின. வங்கதேச அணி ஏற்கனவே இந்த உலககோப்பை தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் தனது கடைசி லீக் போட்டியை ஆறுதல் வெற்றிகாக விளையாடியது.

பாகிஸ்தான் அணி வங்கதேச அணியை 311 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் ஆடியது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் களம் இறங்கி, 9 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்களைக் குவித் தது. தொடர்ந்து ஆடிய  வங்கதேச அணி 44.1 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டு களையும் இழந்தது. இதனால் 94 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஷகின் அப்ரிடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேச அணியை திணறடித்தார்.

இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற போதிலும், அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. அரையிறுதிப் போட்டியில் விளையாட நியூசிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.

துகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது, தாங்கள் மேற்கு இந்தியதீவு அணியிடம் பெற்ற தோல்விதான், தாங்கள் அரை இறுதி போட்டிக்கு செல்ல முடியாத சூழலை ஏற்படுத்தி விட்டதாக புலம்பி உள்ளார்.

மேற்கு இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில்  மோசமாக தோற்றோம், அன்றைய ஆட்டத்தில் 105 ரன் மட்டுமே எடுத்திருந்ததுதான். அன்றைய ஆட்டத்தில், 13.4  ஓவரில் பாகிஸ்தானை வெஸ்ட் இன்டிஸ் அணி தோற்கடித்தது. இதன் காரணமாக ரன் ரேட்டில் பாகிஸ்தான் அணி  மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

இதுவே  பாகிஸ்தான் அணி  செமி பைனலை எட்டாததற்கு இது ஒரு காரணம். ஏற்கனவே பாகிஸ்தான், நியூசிலாந்து இரு அணிகளும் ஒரே அளவிலான 11 பாய்ன்டில் இருந்தது வந்தது. ஆனால், ரன் ரேட்டின்படி நியூசிலாந்து அதிகமாக இருந்து வந்தது.

அப்போதை நிலையில்,  பாகிஸ்தானின் ரன்ரேட் -0.43 அதே வேளையில் நியூசிலாந்து ரன் ரன் ரேட் +0.175 ஆக இருந்தது. இந்த நேரத்தில் வெஸ்ட் இன்டிஸ் போட்டியுடனான படுதோல்வி பாகிஸ் தான் அரையிறுதி போட்டியில் இருந்து  வெளியேற காரணமாக இருந்தது,  தங்களது ஆட்டத்தை மாற்றியது.  என  சர்ஃப்ராஸ் அகமது கூறி உள்ளார்.

நாங்கள் திறமையாக விளையாடியும், தோல்வியை சந்தித்தோம். இதன் காரணமாக செமி பைனலில் நழைய முடியவில்லை என்று தெரிவித்துள்ள சர்ஃப்ராஸ் அகமது,  ஆனால், இந்தியாவுடன் ஆடிய போட்டிக்கு பிறகு, தங்களது அணி சிறப்பாக ஆடியது என்றும், தங்களது அணியின்  பேட்டிங், பவுலிங் பீல்டிங் அனைத்துலேமே சிறப்பாக இருந்தது என்றும் தெரிவித்து உள்ளார்.