சென்னை:
ஜி – 20′ அமைப்பின் கல்வி சார்ந்த மூன்று நாள் கருத்தரங்கம், சென்னையில் நாளை துவங்க உள்ளது.

உலக பொருளாதாரத்தில் உள்ள முதன்மை சிக்கல்களைத் தீர்க்க, வளர்ச்சி அடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைப்பதற்காக, ஜி-20 அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, கனடா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட, 20 நாடுகள் உள்ளன.

இந்த அமைப்பின், 2022 – 23ம் ஆண்டு மாநாட்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் 50 நகரங்களில் பல்வேறு துறைகளுடன் இணைந்து, கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன.