சென்னை: இந்தியாவின் பிரபலமான கல்வி நிறுவனமான, தரமணியின் உள்ள  சென்னை ஐஐடி வளாகத்தில் ஜி-20 கல்வி கருத்தரங்கம் இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள ஜி20 நாடுகளைச் சேர்ந்த கல்வி பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.  முன்னதாக ஐஐடி வந்த அவர்களுக்கு, தமிழ்நாட்டின் பாரம்பரிய இசையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த ஆண்டு ஜி20 நாடுகளின் தலைமையை இந்தியா ஏற்றுள்ளது. இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, கனடா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, துருக்கி, அர்ஜென்டினா, மெக்ஸிகோ, வடகொரியா, தென்கொரியா உள்பட வளர்ச்சியடைந்‌த 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியுனஸ் அயர்ஸில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதத்தை முற்றாக ஒழிப்பது உலக நாடுகளின் முன்பு பெரிய சவாலாக உள்ளது என்று தெரிவித்தார். பயங்கரவாதமும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பவர்களும் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக  இருப்பதாக கூறியதுடன்,  பயங்கரவாதத்தை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதனிடையே, இந்தியாவில் வரும் 2021-ஆம் ஆண்டு ஜி20 மாநாடு நடைபெறவிருந்த நிலையில், 75-ஆவது சுதந்திர தினத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில், அதை 2022-ஆம் ஆண்டுக்கு மாற்றும்படி இந்தியா கோரிக்கை விடுத்தது. இதனை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடி மகிழ்ச்சி பொங்க  தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி20 மாநாட்டில், இந்தியாவுக்கு தலைமை பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கும் நிலையில்,  மாநாட்டிற்கு முன்பாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி என்று பல்வேறு தலைப்புகளின் அடிப்படையில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக, புதுச்சேரி லாஸ்பேட்டை அப்துல் கலாம் அறிவியல் மையத்தில் ஜி20 விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கருத்தாளராக கோலக்கார அரங்கசாமி நாயகர் அரசு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பாஸ்கரராசு கலந்துகொண்டு ஜி20 மாநாட்டின் முக்கிய கருப்பொருளான “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற தலைப்பில் மனித குலத்திற்கு அவசியம் பற்றியும் அவற்றை முன்னெடுத்து செல்வது குறித்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் இடையே கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஜி 20 மாநாடு குறித்த சந்தேகங்களுக்கு தெளிவுபெற்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில்,   ஜி-20 கல்வி செயற்குழு மாநாடு, மெட்ராஸ் ஐஐடியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்றுமுதல் 3 நாட்கள் இந்த கல்வி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ஜி20 நாடுகளைச் சேர்ந்த ஏராளமான பிரதிநிதிகள்  சென்னை வந்துள்ளனர். இதனால் சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடு த்து இன்று ஜி-20 கல்வி செயற்குழு மாநாடு ஐஐடி ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் தொடங்கியது.  இதில் 29 நாடுகள், 15 பன்னாட்டு நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். காலை 9 மணிக்கு தொடங்கிய  இந்த கருத்தரங்கு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இ  முதல் நாளான இன்று டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது தொடர்ந்து நடைபெறும், கருத்தரங்கில் ஜி-20 நாடுகளை சேர்ந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்

ஒவ்வொரு துறைசார்ந்த அமைச்சர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து வருகை புரிந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்தந்த நாடுகளில் உள்ள சிறப்பான அம்சங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.  ஜி20 கல்வி மாநாட்டில் மாநாட்டில் கலந்துகொள்ள வந்துள்ள பல்வேறு நாடுகளின் விருந்தினர்கள் பல நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, பிரபல நட்சத்திர விடுதிகள், ஐஐடி வளாகம் உள்பட முக்கிய இடங்களில்,  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.