சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19ந்தேதி காலையுடன் முடிவடைய உள்ளதால், ஊரங்கை மேலும் நீட்டிப்பது குறித்து மருத்து நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளளார்.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை பாதிப்பு, அரசின் கடும் நடவடிக்கைகள் காரணமாக  கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 19-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இதுவரை பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் என சிலவற்றுக்கு தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.

இந்த நிலையில்,  ஊரடங்கை கூடுதல் தளர்வுகள் மேலம் நீட்டிப்பது   குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களும் கேட்கப்பட உள்ளது.

விரைவில் கொரோனா 3வது அலை பரவும் வாய்ப்பு உள்ளதால், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது.