புதுடெல்லி :

வாழக்கையில் ஒவ்வொரு நாளும் போராடி வாழ்ந்துவரும் விவசாயிகள், வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி பலநாட்களாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

தலைநகர் டெல்லி நோக்கி முன்னேறுவதை குறிக்கோளாக கொண்டு போராடிவரும் இவர்கள், வீதிகளில் இறங்கி போராடி வருவதோடு, ‘இப்போ இல்லையென்றால் எப்பவும் இல்லை’ என்ற முடிவோடு களமிறங்கி இருக்கிறார்கள்.

இவர்களுக்காக, ஹரியானா மாநிலம் ப்ஹுலன் பகுதியை சேர்ந்த 35 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் தினமும் 2000 லிட்டர் அளவுக்கு பால் வழங்கி வருகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்தும் நன்கொடையாக பணமும் பொருளும் கொடுத்து உதவும் இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள், இவர்களுக்காக 2000 கிலோ பாதம் பருப்பு உள்ளிட்டவற்றை அனுப்பி வைத்துள்ளனர்.

விவசாயிகளுக்கு சமையல் செய்ய தேவையான பொருட்களை கொண்டு வரவும், சமைத்த உணவை கொண்டு சென்று விநியோகிக்க பயன்படுத்தப்படும் 40 க்கும் மேற்பட்ட ட்ராக்டர்களுக்கு தேவையான எரிபொருளை, அவர்களுக்கு கிடைத்த நன்கொடைகளை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இதுதவிர, பஞ்சாப் மாநிலம் பதிண்டா பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் உரிமையாளர் டெல்லி நோக்கி போராட்டதிற்கு செல்லும் விவசாயிகளுக்கு ஆதரவாக நான்கு நாட்கள் விவசாயிகளின் வாகனங்களுக்கு இலவச பெட்ரோல் வழங்கி இருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் மாவட்ட கமலா ஆரஞ்சு பழ விவசாயிகள், இவர்களுக்காக அனுப்பிவைத்துள்ளனர். வேறு சில விவசாயிகளோ குவிண்டால் கணக்கில் கேரட் உள்ளிட்ட காய்கறிகளை அனுப்பிவைத்துள்ளனர்.

பஞ்சாபை சேர்ந்த முஸ்லீம் அமைப்பு ஒன்று மிக்ஸர் உள்ளிட்ட தின்பண்டங்களை அனுப்பி வைத்துள்ள இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் இதுவரை 40 குவிண்டால் அரிசி பயன்படுத்தியிருப்பதாக கூறுகின்றனர்.

லூதியானவை சேர்ந்த தொழிலாதிபர்கள், இவர்களுக்காக இரண்டு முறை மருத்துவ பொருட்களை அனுப்பிவைத்துள்ளனர்.

மேலும், சில கிராமங்களில் இருந்து 100 பேர் கொண்ட குழுவாக இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சுழற்சிமுறையில் போராட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகள் மற்ற நாட்களில் இவர்களுக்கு தேவைப்படும் உதவி பொருட்களை பெறுவதற்கு சென்று விடுகின்றனர்.

அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் ஒரு நீண்ட நெடிய போராட்டத்திற்கு தயாராக வந்திருக்கும் இந்த விவசாயிகளுக்கு, நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருவதோடு, கோதுமை, பாசிப்பயிறு, மூக்கடலை உள்ளிட்ட தானியங்களையும் வழங்கி வருகின்றனர்.

டெல்லியின் எல்லையில் முகாமிட்டிருக்கும் இந்த விவசாயிகள், ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் உள்ள பா.ஜ.க. அரசுக்கு சவால் விடுத்துவருவதோடு, அவர்களுக்கு எதிராக “இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை” என்று ஒருமித்த குரலில் எழுச்சியுடன் ஓங்கி ஒலிக்கின்றனர்.