சென்னை: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று என்ஐஏ சோதனைகளை நடத்தி வரும் நிலையில், குறிப்பாக நாம் தமிழர் கட்சியினர் வீடுகளில் காலை முதல் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பிரபல யுடியூபர் சாட்டை முருகன், தென்னகம் விஷ்னு. உள்பட பலரது வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
சாட்டை முருகன் உள்பட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் விடுதலைப்புலிகளிடம் இருந்த பணம் பெற்றதாக கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து இந்த வேட்டை நடைபெற்று வருகிறது.
2024 நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. ஒருபுறம் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றாலும், மற்றொரு புறம், தேர்தல் செலவினங்களுக்கான நிதி வசூல்களும் பெரு குறு நினவனங்களிடமும், வணிகர்களிடமும் மறைமுகமாக நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப்புலிகளிடம் இருந்து நாம் தமிழர் கட்சி நிதி பெற்று வருவதாக குற்றச்சாட்டுக்களும் சில ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. தற்போதும் நிதி பெற்றதாக தகவல்கள் பரவியள நிலையில், என்ஐஏ அதிரடி சோதனைகளை மேற்கொண்டு கிறது.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. மேலும், விடுதலைப்புலிகள் குறித்து அவ்வப்போது பேசி அக்கட்சியின் தலைவர் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் சென்னை, நெல்லை, மதுரை ஆகிய இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பா,க தமிழகத்தில் விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் வீடுகள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளின் வீடுகளில் இன்று காலை 5 மணி முதல் என்.ஐ.ஏ தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல யுடியூபரான சாட்டை துரைமுருகன் வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். விடுதலைப்புலிகளிடம் இருந்து சாட்டை முருகனுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
அதுபோல மற்றொரு யுடியூபரான தென்னகம் விஷ்ணு வீடுகளிலும் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. இவர்களின் வங்கிக்கணக்குகள் உள்பட பலவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதுபோல, நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளர் இடும்பாவனம் கார்த்திக்கு என்.ஐ.ஏ அதிகாரிகள் நேரில் ஆஜகராக வேண்டும் என வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். அதற்கு வெளியூரில் இருப்பதால் பிப்ரவரி 5 ஆம் தேதி ஆஜராவதாக இடும்பாவனம் கார்த்தி அதிகாரிகளுக்கு பதில் அனுப்பியுள்ளார்.