சென்னை
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாவதையொட்டி முதல்வர் மு க ஸ்டாலின் இன்று காலை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்
தமிழகத்தில் கொரோனா தாக்கம் மிகவும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 35,873 பேர் பாதிக்கப்பட்டு 18,06,861 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 448 பேர் மரணம் அடைந்து மொத்தம் 20,046 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 25,776 பேர் குணம் அடைந்து இதுவரை 15,02,537 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,84,278 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டும் பரவல் குறையவில்லை. மக்கள் ஊரடங்கு தளர்வுகளை தவறாகப் புரிந்து கொண்டு ஊரைச் சுற்றி வருவதாக முதல்வர் உள்ளிட்ட பலரும், குறை கூறி உள்ளனர். எனவே கொரோனாவை கட்டுப்படுத்த நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலாக உள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று காலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். நாளை முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல் படுத்துவதுகுறித்து அவர் ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த காணொலி மூலம் நடைபெறுகிறது. கூட்டத்தில் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர், உயர் அதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்க உள்ளனர்.