இதற்கான ஒளிபரப்பு நிகழ்ச்சி நேற்று (ஜூலை 14ந்தி) தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி, திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணிநேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பையும் மற்றும் பிற வகுப்புகளின் பாடங்களுக்கான ஒளிபரப்பும் செய்யப்படுகிறது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும், மேலும் 14 தனியார் தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதையடுத்து கல்வித் தொலைக்காட்சியில் ஒளிரபரப்பப்படும் நிகழ்ச்சிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி
காலை 6 மணி முதல் 8 மணி வரை நீட், ஜெ.இ.இ. மாணவர்களுக்கான பாடம் ஒளிபரப்படுகிறது.
காலை 8 மணி முதல் 9 மணி வரை 10ம் வகுப்பு பாடம் ஒளிபரப்பு
காலை 9 முதல் 10 மணி வரை 9 ம் வகுப்பு பாடம் ஒளிபரப்பு
காலை 10 முதல் 11 மணி வரை மீண்டும் 10ம் வகுப்பு பாடம் ஒளிபரப்பு
காலை 11 முதல் 12 மணி வரை மீண்டும் 9 ம் வகுப்பு பாடம் ஒளிபரப்பு
பகல் 12 மணி முதல் 12.30 மணி வரை 10ம் வகுப்பு பாடம்
பகல் 12.30 மணி முதல் 1 மணி வரை 9ம் வகுப்பு பாடம்
மதியம் 1 மணி முதல் 1.30 மணி வரை இடைவேளை
1.30 மணி முதல் மாலை 4 மணி வரை 8வது வகுப்புக்கான பாடங்கள்
மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை 6வது வகுப்புக்கான பாடம்
மாலை 4.30 மணி முதல் 5 மணிவரை 8வது வகுப்புக்கான பாடம்
மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை 2வது வகுப்பு பாடம்
மாலை 5.30 மணி முதல் மாலை 6 மணி வரை 3வது வகுப்பு பாடம்
மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை 4வது வகுப்பு பாடம்
6.30 மணி முதல் இரவு 7 மணி வரை 5வது வகுப்பு பாடம்
இரவு மணி முதல் 11 மணி வரை நீட், ஜெ.இ.இ தேர்வுக்கான பாடங்கள்….
கல்வித்தொலைக்காட்சி ஒளிரபப்பு தொடங்கப்பட்டது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகளில் கல்வி பயில ஏதுவாக மென் உருவிலான பாடங்களை மடிக்கணினிகளில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலமாக தரவிறக்கம் செய்யும் திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
கொரோனா தொற்று காரணமாக 2020-21-ம் கல்வியாண்டிற்கான கல்வி மற்றும் கற்பித்தல் ஆகியவற்றில் ஏற்படும் சிரமங்களை எதிர்கொள்ள தேவையான ஆலோசனைகள் வழங்கிட தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கையை, அந்த வல்லுநர் குழுவின் தலைவரான பள்ளிக் கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், முதல்-அமைச்சரிடம் சமர்ப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ச.கண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.