குடியரசுத்தலைவர் பாஜக வேட்பாளர் கோவிந்த்… பயோடேட்டா

டில்லி

பாஜக சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் ராம்நாத் கோவிந்த்.  இவர் பீகாரின் கவர்னரும் ஆவார்.  அவரைப் பற்றிய விவரங்கள் இதோ

ராம்நாத் கோவிந்த் உத்திரப் பிரதேச மாநிலத்தில் 1945ஆம் வருடம் அக்டோபர் 1ம் தேதி பிறந்தார்.  அவர் மனைவி பெயர் சவீதா கோவிந்த்.  திருமணமானது 1974 ஆம் வருடம் மே மாதம் 30ஆம் தேதி.

இவர் மகன் பிரசாந்த் குமார் திருமணமானவர். மகள் சுவாதி.

ராம்நாத் பி.காம்,, மற்றும் எல். எல். பி பட்டம் பெற்றவர்

வழக்கறிஞர் பணி விவரம்

1971 முதல் வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்டவர்

1993 வரை டில்லி உயர்நீதி மன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் பல வழக்குகளை நடத்தியுள்ளார்.

உச்சநீதி மன்றத்தின் அரசு வழக்கறிஞராக 1980 முதல் 1993 வரை பணிபுரிந்து வந்தார்.

பாராளுமன்ற பணிகள் :

1984ஆம் வருடம் மக்களவை உறுப்பினராக உத்திர பிரதேசத்தில் இருந்து இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு 2006 வரை பதவி வகித்தார்.

பதவிக் காலத்தில்

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நல பாராளுமன்றக் குழு

உள்துறை பாராளுமன்றக் குழு

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எர்வாயு பாராளுமன்றக் குழு

சமூக நீதி பாராளுமன்றக் குழு

சட்டம் மற்றும் நீதித்துறை பாராளுமன்றக் குழு

போன்றவற்றில் முக்கிய உறுப்பினராகவும்,

மக்களவை உள் குழுவின் தலைவராகவும் பொறுப்புக்களை வகித்தவர்.

மற்றப் பணிகள் :

அம்பேத்கார் பல்கலைக்கழகத்தில் நிர்வாகக்குழு உறுப்பினர், ஐஐஎம் கல்கத்தாவின் நிர்வாகக்குழு உறுப்பினர்,

ஐநா சபையின் 2002ஆம் வருடத்தின் இந்தியப் பிரதிநிதி

பாராளுமன்ற ஆய்வுக்குழு உறுப்பினராக, தாய்லாந்து, நேபாளம், பாகிஸ்தான், சிங்கப்பூர், ஜெர்மனி. ,ஃபிரான்ஸ், மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார்

மாணவப் பருவத்தில் இருந்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், பெண்கள், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் நலனுக்காக போராடியவர்.

1997ஆம் ஆண்டில் அரசால் தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர் நலனுக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டங்களை எதிர்த்து வழக்காடி, அந்த மக்களின் நலனுக்காக சட்ட திருத்தம் செய்ய வைத்தார்.

ராம்நாத் ஒரு மாபெரும் கல்வியாளர். தனது எம். பி. பதவிக்காலத்தில் கிராமங்களிலுள்ள பல பள்ளிகளுக்கு தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து கட்டிடம் கட்ட, மற்றும் பல உதவிகளுக்கு பணம் அளித்துள்ளார்.

வழக்கறிஞராக இருந்தபோது ஏழை எளிய மக்களுக்காக, குறிப்பாக SC/ST மற்றும் பெண்களுக்கு பலமுறை இலவசமாக வாதாடி நீதி கிடைக்கச் செய்தவர்.

இவரின் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பணிகளினால் அனைத்துக் கட்சியினரும் இவரை ஆதரிப்பார்கள் என பாஜக நம்புகிறது

 

 


English Summary
Full details about Ramnath Govind