லகாபாத்

முன்னாள் உ. பி. அமைச்சர் காயத்ரி பிரசாத் கற்பழிப்பு வழக்கில் ஜாமீன் பெற ரூ 10 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காயத்ரி பிரசாத் ஒரு கற்பழிப்பு வழக்கில் ஜாமீன் கோரி இருந்தார்.  அவருக்கு நீதியரசர் மிஸ்ரா ஜாமீன் வழங்கினார்.

நீதியரசர் மிஸ்ரா குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நீதி மன்றத்தில் கடந்த ஏப்ரல் 7ல் நியமிக்கப் பட்டார்.  அதே நீதி மன்றத்தில் உள்ள மற்றொரு நீதிபதியின் சீனியாரிட்டியை தாண்டி இவருக்கு பதவி வழங்கப்பட்டது.  இவர் ஓய்வு பெற மூன்று வாரங்களே இருந்த நிலையில் இது நிகழ்ந்தது.

பதவி கிடைத்த பின் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதியன்று அமைச்சருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.   மிஸ்ரா பதவிக்கு வந்ததை ஆய்வுத்துறை விசாரணை செய்த போது, அவர் அமைச்சருக்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு ஜாமீன் வழங்கியது தெரியவந்தது.  அமைச்சருக்கு ஜாமீன் கிடைத்தது பற்றி நடந்த விசாரணைக்குழுவும் இதே தகவலை கண்டுபிடித்தது;.

 

அந்த விசாரணைக்குழு அளித்த அறிக்கையின் படி இந்த ஜாமீனுக்காக ரூ 10 கோடி கைமாறியுள்ளது.  அதில் இந்த டீலிங்கில் தரகர் போல செயல்பட்ட மூன்று வழக்கறிஞர்களுக்கு ரூ 5 கோடியும், நீதியரசர் மிஸ்ரா, மற்றும் மிஸ்ராவுக்கு பதவி அளித்த ராஜேந்திரசிங் ஆகியோருக்கு ரூ 5 கோடியும் கொடுக்கப்பட்டது தெரிய வந்தது.

தற்போது அனைவரின் மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது