நாளை முதல் மறுஉத்தரவு வரும் வரை…. பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு

Must read

திருநெல்வேலி:
திருநெல்வேலி பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிர் சம்பவத்தை தொடந்து, நாளை முதல் மறுஉத்தரவு வரும் வரை அந்த பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது எட்டாம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், விஸ்வரங்சன் உள்ளிட்ட 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், மேலும் காயமடைந்த 4 மாணவர்களுக்கு சிகிச்சையளிக்கப்டுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சாப்டர் பள்ளியின் தாளாளர் சாலமன் செல்வராஜ், தலைமை ஆசிரியை ஞான செல்வி, ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள இருப்பதால் நாளை முதல் 26ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .

More articles

Latest article