சென்னை

நாளை முதல் செப்டம்பர் 11 வரை வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்,

”தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பாக வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு 850 சிறப்பு பேருந்துகள் 25-ந்தேதி (நாளை) முதல் செப்டம்பர் 11-ந்தேதி வரை இயக்கப்பட உள்ளது.

திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காகத் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் மூலமாகச் சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் மூலமாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஒரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு மொத்தம் 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இதையொட்டி பயணிகள் தொலைதூரங்களில் இருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் முன்பதிவு செய்து, வேளாங்கண்ணி செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

தவிரக் குழுவாகப் பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சேவையினை வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.”

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.