புதுச்சேரி
நாளை முதல் புதுச்சேரி மாநிலத்தில் மதுபானங்கள் விலை உயர்கின்றன.

புதுச்சேரி மாநிலம் யூனியன் பிரதேசம் என்பதால் அங்குப் பல பொருட்கள் விலை மலிவாக விற்கப்படுகின்றன. குறிப்பாக மதுபானங்கள் விலை மிகவும் குறைவாகும். இதனால் அண்டை மாநிலங்களில் இருந்தும் பலர் மது அருந்தப் புதுச்சேரி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று புதுச்சேரி அரசு மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வை வரியை 20% அதிகரித்துள்ளது. இந்த வரி அதிகரிப்பு அனைத்து வகை மதுபானங்களுக்கும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நாளை அதாவது ஜூலை 15 முதல் புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்கின்றன.
Patrikai.com official YouTube Channel