டில்லி

ந்திய ரிசர்வ் வங்கி மாஸ்டர் நிறுவன டெபிட் கார்டுகளுக்கு தடை விதித்துள்ளது.

மாதிரி புகைப்படம்

வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாஸ்டர், விசா உள்ளிட்ட டெபிட் கார்டுகள் வழங்குகின்றன.   தற்போது பல தேசிய வங்கிகளில் இந்தியாவின் ருபே கார்டுகள் வழங்கப்படுகின்றன. இவை அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளின் கீழ் இயங்கி வருகின்றன. இதில் மாஸ்டர் நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டளைகளை மீறி உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து டெபிட் கார்ட் நிறுவனங்களும் கட்டண முறை தரவுகளைச் சேமிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.  ஆனால் மாஸ்டர் நிறுவனம் அந்த உத்தரவுக்குக் கீழ்ப்படியவில்லை.  இதற்கான கால அவகாசத்தை நீட்டித்த ரிசர்வ் வங்கி பல வாய்ப்புக்களை வழங்கியது.  ஆயினும் மாஸ்டர் நிறுவனம் வாடிக்கையாளர்கள்  மீதான கட்டண தரவுகளை சேமிக்கவில்லை.

எனவே இந்திய ரிசர்வ் வங்கி தனது கட்டளையை மீறியதால் மாஸ்டர் நிறுவன கார்டுகளுக்கு தடை விதித்துள்ளது.   அதாவது இண்டஹ் நிறுவனம் ஜூலை 22 முதல் புதிய வாடிக்கையாளர்களை இணைக்க முடியாது.   மேலும் இந்த தடை உத்தரவு தற்போதைய மாஸ்டர் கார்ட் வாடிக்கையாளர்களை எவ்விதத்திலும் பாதிக்காது  என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.