சென்னை

சென்னையில் நாளை முதல் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக ஒப்பந்ததாரர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னை நகரில் பெரும்பாலான இடங்களில் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.  அவ்வாறு வழங்க முடியாத இடங்களுக்குத் தண்ணீர் லரிகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.  அத்துடன் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி தண்ணீர் பெறுவோருக்கும் லாரிகள் மூலம் விநியோகம் நடக்கிறது.  இதற்காக சுமார் 650 லாரிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றன.,

தண்ணீர் லாரி ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தம் சென்ற ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்துள்ளது.  எனவே புதிய வாடகையில் ஒப்பந்தம் இடக்கோரி ஒப்பந்ததாரர்கள்  வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் சென்னை மாநகர குடிநீர் வாரியம் இதற்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.  எனவே வரும் 25 ஆ,ம் தேதி அதாவது நாளை முதல் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக ஒப்பந்ததாரர்கள் சங்கம அறிவித்துள்ளது.

இந்த வேலை நிறுத்தத்தால் பொதுமக்களில் பலருக்குக் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.  பல்வேறு நீரேற்று நிலையங்களில் இருந்து குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்குக் குடிநீர் வழங்கும் பணியும், குடிநீர் குழாய் இணைப்பு  இல்லாத மக்களும் பெரிதும் பாதிப்படையலாம் எனக் கூறப்படுகிறது.