திருவனந்தபுரம்

நாளை முதல் கேரளாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் ஆன்லைனில் செயல்பட உள்ளன.

நாடெங்கும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  தற்போது நாடெங்கும் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு கடுமையாகி உள்ளது. நாட்டின் முதல் கொரோனா பாதிப்ப கேரளாவில் கண்டறியப்பட்டது தெரிந்ததே.   

நாடெங்கும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.   மூன்றாம் அலையால் கேரளாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  இதையொட்டி கேரளாவில் கட்டுப்பாட்டு விதிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

இதில் ஒன்றாக கேரள உயர்நீதிமன்றம் அனுப்பிய சுற்றறிக்கையில் ”கேரளாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் நாளை முதல் ஆன்லைனில் செயல்படும் மிகவும் தவிர்க்க முடியாத வழக்குகளில் நேரடி விசாரணை நடைபெறலாம். நீதிமன்றத்தில் 15 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்” என உத்தரவிடப்பட்டுள்ளது.