சென்னை

சென்னையில் மெரினா கடற்கரைக்கு இன்று முதல் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.  நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 1489 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   இதில் சென்னையில் 682 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் பாதிப்பும் சென்னையில் அதிக அளவில் அதாவது இதுவரை 92 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

தமிழக அரசு இதையொட்டி பல தடுப்பு நடவடிக்கைகள் அறிவித்துள்ளன.   வைரஸ் பரவலைத் தடுக்க மக்கல் கூடும் இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை அரசு வலியுறுத்தி உள்ளது.  கடந்த அண்டு போல மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகமாகாமல் இருக்க அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அதில் ஒரு நடவடிக்கையாகச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள்

மெரினா கடற்கரைக்குப் பொழுது கழிக்க ஏராளமானோர் வருவதைத் தடுக்கும் வகையில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையான இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கடற்கரைக்குள் செல்ல முயன்றால் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்துவார்கள். 

இந்த தடை உத்தரவு, மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும். அதே நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்தியேக நடைபாதையில் செல்வதற்கும், காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி செல்பவர்களுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தாது.

என அறிவித்துள்ளனர்.