கீழடி

ன்று முதல் கீழடி திறந்தவெளி கண்காட்சியைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள கீழட்சியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் முடிவ்டநிந்தன.   இங்கு அகழாய்வு செய்யப்பட்ட தளங்கள் திறந்த வெளி கண்காட்சி தலமாக மாற்றப்படும் எனத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  இந்த கண்காட்சி தற்காலிகமாகத் திறக்கப்பட்டது.

பிறகு இந்த கண்காட்சியை மக்கள் இடையூறின்றி பார்வையிட ஷெட், தடுப்புச் சுவர்கள், மழைநீர் வடிகால் வசஹி உள்ளிட்டவை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடந்து வந்தது.  தற்போது இந்த பணிகள் முடிவடைந்துள்ளன.  இதையொட்டி இன்று அதாவது பிப்ரவரி 24 முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

இந்த பகுதியில் நடந்த 7ஆம் கட்ட அகழாய்வில் 8 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இங்கு சிவப்பு நிறப் பானை, மீன் உருவம் கொண்ட உறைகிணறு, தந்த பகடை, சுடுமண் பகடை, வெள்ளி முத்திரை நாணயங்கள், செப்பு பொருட்கள், பானை ஓடுகள் என பல பொருட்கள் கிடைத்தன.  இன்று முதல் அகழாய்வு மூலம் கண்டறியப்பட்ட உறை கிணறுகள் உள்ளிட்டவற்றை மக்கள் நேரில் கண்டு ரசிக்க முடியும்.