சென்னை
இன்று அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெய்யில் தொடங்குவதால் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.
வருடத்தில் சித்திரை மாதம் கடைசி வாரம் தொடங்கி, வைகாசி மாதம் முதல் வாரம் வரை உள்ள காலகட்டமே மிக அதிக வெப்பம் உள்ள காலமான அக்னிநட்சத்திரம் என்ற கத்திரி வெயில் எனப்படுகிறது. நடப்பு ஆண்டு சித்திரை மாதம் 21-ந் தேதி தொடங்கி, வைகாசி 14-ந் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது.
அதன்படி இன்று (வியாழக்கிழமை) தொடங்கும் கத்திரி வெயில் வருகிற 29-ந்தேதி முடிவடைகிறது. எனவே இந்த 25 நாட்களும் கத்திரி வெயில் காலத்தில் வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்குச் சூரியனின் கதிர்கள் சுட்டெரிக்கும்.
இந்த அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும் என்பதால் பகல் பொழுதில் பொதுமக்கள் வெளியே நடமாடுவதைத் தவிர்க்கலாம் எனவும் அதிகளவு தண்ணீர் குடிப்பதுடன், ஐஸ் சர்பத், பழங்கள், மோர் சாதம் எனக் குளிர்ந்த ஆகாரங்களை அதிகம் சாப்பிட வேண்டும். என்றும் இயற்கை மருத்துவர்கள் கூறுகின்றனர்.