கடலூர்: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக தலைமைக்கு எதிராக கட்சியின் பல முன்னணியினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இந்த நிலையில், பாமகவின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் சமட்டிக்குப்பம் இரா.ஆறுமுகம் பாமகவில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில், பாமகவுக்காக தான் வெட்டுப்பட்டு, ரத்த வெள்ளத்தல் கிடந்த புகைப்படத்துடன் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,
#சிந்தியது_போதும்
#இனி_சிந்திப்போம் !!!
நெய்வேலி மற்றும் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் வேல்முருகனை எதிர்த்து அரசியல் செய்தவன் நான். நான் செய்த களப்பணியை பார்த்து என்னை கொலை முயற்சி செய்தபோது என் கைகளிலும் கால்களிலும் வெட்டுப்பட்டது அப்படி வெட்டுப்பட்ட கால்களால் ஓடி ஓடி எனது கட்சி பணியை செய்தேன். அப்படி விட்டு பட்ட கைகளால் எத்தனை கொடி கம்பங்களை நட்டு இருப்பேன் இந்த இயக்கத்திற்காக வெறும் வியர்வையை மட்டும் இல்லாமல் என் ரத்தத்தையும் சிந்தி உயிரை பணையம் வைத்து கள பணியாற்றினேன் இனி என் உடம்பில் இருக்கும் ரத்தம் இன்னும் சிறிது காலம் உயிர் வாழ தேவைப்படும் உடலாலும் மனதாலும் நான் அதிக வலிகளை அனுபவித்துவிட்டேன் அதனால் இன்று முதல் கட்சியின் களப்பணியில் இருந்து ஓய்வெடுக்க போகின்றேன் என்றும் என் மனதில் மருத்துவர் அய்யா அவர்கள் மற்றும் மருத்துவர் சின்னையா அவர்கள் நிலைத்து நிற்பார்கள்🙏🏻
என்றும் மருத்துவர் அய்யா அவர்களின் விசுவாசி
சமட்டிக்குப்பம் இரா.ஆறுமுகம் என கூறியுள்ளார்.
சமட்டிக்குப்பம் இரா.ஆறுமுகத்தின் உருக்கமான பாமகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கட்சி தலைமை மீதான அதிருப்தியை மேலும் வலுவாக்கி உள்ளது.